Friday, January 14, 2011

இளம் பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட பகுஜன் எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

லக்னோ:உத்தர பிரதேசத்தில் தலித் பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., புரு÷ஷாத்தம் நரேஷ் துவிவேதி நேற்று கைது செய்யப்பட்டார்.உத்தர பிரதேச மாநிலம், நராயினி சட்டசபை தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் புரு÷ஷாத்தம் நரேஷ் துவிவேதி . இவர், தலித் வகுப்பைச் சேர்ந்த 17 வயது பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அதேநேரத்தில், எம்.எல்.ஏ., கொடுத்த புகாரின் பேரில், கடந்த மாதம் அந்தப் பெண் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

                                         பாண்டா மாவட்டத்தில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதும், அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

                                          இந்த மாதிரியான வழக்குகளுக்கு வெறும் சிறை தண்டனை என்பது வெறும் கண் துடைப்பு. இவர்களுக்கெல்லாம் முஸ்லீம் நாடுகளில் கொடுக்கப்படும் கடுமையான தண்டணைகள் போல் இங்கும் கொடுத்தால் தான் நமது நாடு இந்த மாதிரியான காமூகங்கள் கையிலிருந்து விடுபடும்.

Wednesday, January 12, 2011

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு

விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.

                                              உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.

                                                     இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
 நன்றி
தினமலர்.

                                 இது போன்ற கண்டுபிடிப்புகளால் நாட்டில் அன்றாடம் நிகழும் இரண்டு சக்கர வாகனங்களின் விபத்துக்களை பெரிய அளவில் குறைக்கலாம், இதற்கு அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                     

Wednesday, January 5, 2011

காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் 8 மணிநேரம் சி.பி.ஐ.,விசாரணை

இந்த சி.பி.ஐ., விசாரணை என்பது வெறும் கண் துடைப்பு. இது வரை எந்த ஒரு வழக்கிற்கும் சி.பி.ஐ., மூலமாக எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை என்பதே உண்மை அப்படி இருக்க இதற்கு மட்டும் தீர்வு கிடைக்கவாபோகிறது.
                              
இதை விட பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சுமார் 1,78,000 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அதில் எந்த ஒரு நடவடிக்கையிலும் முன்னேற்றம் இல்லை அப்படி இருக்க இந்த காமன்வெல்த் ஊழலில் மட்டும் என்ன விடையா கிடைக்கபோகிறது.

 இந்த ஊழல்களில் தொடர்புடையவர்களை மக்களே நேரிடையாக தண்டிக்கும் காலம் வந்தால் மட்டுமே இந்த ஊழல்வாதிகள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

Tuesday, January 4, 2011

தேர்தல் ஆண்டு

மீண்டும்  அணைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.....

இந்த வருடம் தமிழகத்திற்க்கு சிறப்பான காலம் எனலாம், ஏனெனில் இந்த வருடம் தேர்தல் ஆண்டு (சட்டபேரவை தேர்தல்).

                                   மக்கள் தங்களுடைய பிரம்ம அஸ்திரத்தை(வாக்களிப்பது) பயன்படுத்த கூடிய ஒரு பொன்னான தருணம் ஆகும்.

                                 மக்களை இலவசம் என்ற பெயரில் சோம்பேறிகளாக மாற்றி வரும் இந்த நயவஞ்சக அரசியல்வாதிகளடம் இருந்து மாறி இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யகூடிய நல்லவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல காலம் ஆகும்.

                                     இதனை மக்கள் மட்டுமே சிந்தித்தால் தான் நடக்கும், அதை விட்டு விட்டு இலவசங்கள் மற்றும் வாக்குக்கு யார் பணம் தருவார் என்று பின்னாடி சென்றால்  அடுத்த ஐந்தாண்டில் நம் தமிழ் நாடு இந்திய வரைபடத்திலிருந்து காணாமல் போனாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.