Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

Thursday, September 9, 2010

ஒரே கிராமத்தில் 1,200 கண் தானம் செய்து சாதனை

ஐதராபாத் : ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1,200 பேர், ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண் தானம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஐதராபாத்தில் இருந்து 42 கி.மீ., தூரத்தில் ரங்கா ரெட்டி மாவட்டம், செவெல்ல டவுன் அடுத்த தேவுனி எர்ரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கண் தானம் வழங்கியது குறித்து, கிராமத்தில் உள்ள பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரசாரம் மேற்கொண்டனர்.விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் ஏராளமானவர்கள் கண் பார்வை இழந்து விடுகின்றனர். அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளி தரும் வகையில், தங்களது மரணத்திற்குப் பின் கண்களை தானமாக வழங்குவது ஒரு முன் உதாரணமான சம்பிரதாயமாகும் என முடிவு செய்த இந்த கிராம மக்கள், சுய சிந்தனையுடன் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்த பின், கண்களை தானமாக வழங்க முடிவெடுத்தனர்.

இதன் முதற்கட்டமாக 200 பேர், ஐதராபாத் சரோஜினி தேவி கண் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வந்து, தங்கள் மரணத்திற்குப் பின் கண்களை தானமாக வழங்குவதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர்.மேலும் இதே கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர், தங்கள் கண்களை தானமாக வழங்குவதாக தெரிவித்து அதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்ட பத்திரங்களையும் மருத்துவமனையின் மேற்பார்வையாளரிடம் வழங்கினர்.கண் தானம் வழங்குவதன் மூலம் பயனாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து கிராமத்தினரிடையே கடந்த இரண்டு மாதங்களாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த ஊராட்சித் தலைவர் சத்தியநாராயண ரெட்டி, மேலும் 1,100 பேர் கண் தானம் வழங்க முன் வந்துள்ளதாக அறிவித்தார். இவர், ஆந்திர மாநில ஊராட்சித் தலைவர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.இதையடுத்து, மாநிலத்திலேயே சிறந்த கிராமமாக எர்ரவள்ளி கிராமத்தைத் தேர்ந்தெடுக்க, இத்தொகுதியின் எம்.எல்.ஏ., ரத்தினம், அரசிடம் சிபாரிசு செய்து வருகிறார்.


நன்றி
தினமலர்

Thursday, September 2, 2010

சிறந்த மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு ரூ 1 லட்சம் பரிசு !

''த‌மி‌ழி‌ல் ‌சிற‌ந்த மெ‌ன்பொருளை உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசாக வழ‌‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
இ‌ந்த ப‌ரிசை பெறுவத‌ற்கு, த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சியை கரு‌த்‌தி‌ல் கொ‌‌ண்டு உருவா‌க்க‌ப்‌பட்ட மெ‌ன்பொருளாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மெ‌ன் பொரு‌‌ள் த‌னி ஒருவராலோ, கூ‌ட்டு முய‌ற்‌சியாலோ அ‌ல்லது ‌‌நிறுவன‌த்தாலோ உருவா‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ஒ‌வ்வாருவரு‌ம் த‌ங்களை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், ப‌திவு‌‌க் க‌ட்டணமாக ரூ.100 பணமாகவோ, வரைவோலையாகவோ த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை இயக்குன‌ர் எ‌ன்ற பெய‌ரி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌மேலு‌ம், வி‌ண்ண‌ப்ப‌ங்களை "த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த் துறை இய‌க்கு‌‌ன‌ர், த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி வளாக‌ம் முத‌ல் தள‌ம், ஆ‌ல்சு சாலை, எழு‌ம்பூ‌ர் செ‌ன்னை-8" எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் பெறலா‌ம் எ‌ன்று‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் மா‌ர்‌ச் 5‌ம் தே‌தி‌க்கு‌ள் வ‌ந்து சேர வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ஒ‌வ்வொரு ஆ‌‌ண்டு‌ம் சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொருளை உருவா‌க்‌கியவ‌ரை தே‌ர்வு செ‌ய்து, க‌ணி‌ய‌ன் பூ‌ங்குன்றனா‌ர் பெய‌ரி‌ல் ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌வதாக த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.


மீ. குமார்