Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Wednesday, February 2, 2011

சுற்றுச்சூழல் பாதிக்காத "ஏர்கூலர்' கண்டுபிடிப்பு:

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நவீன, "ஏர்கூலர்' உருவாக்கியதற்காக, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்ரியாவுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.மதுரையில், பள்ளியளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சத்யப்ரியாவின் படைப்பு, பார்ப்போரை கவர்ந்தது. எனவே, மண்டல போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். அடுத்ததாக, டில்லியில் நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் இவரது படைப்பு போற்றப்பட்டது. மொத்தம், 18 மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

                  இதிலிருந்து ஐந்து சிறந்த மாதிரிகள், ஜெய்ப்பூரில் நடந்த, 37வது ஜவகர்லால் நேரு தேசிய அறிவியல் கண்காட்சியில் (குழந்தைகளுக்கானது) இடம்பெற்றன. அதில், இவரது படைப்பும் இடம்பெற்றது; தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த குழந்தைகள் அறிவியல் காங்கிரசிலும் பங்கேற்றார்.


சத்யப்ரியா கூறியதாவது:"ஏசி'யை பயன்படுத்துவதால் குளோரோ புளூரோ கார்பன்களின் அளவு அதிகரிக்கிறது. ஏர்கூலர் மூலம் ஓசோனில் மாற்றம் ஏற்படுகிறது. "ஏசி'க்கு மாற்றாக, அதே நேரம் ஏர்கூலரை புதிய விதமாக மாற்ற முயற்சித்தேன். களிமண் பானை, டியூப்கள், மின்விசிறி, தாமிர டியூப்கள் இவற்றின் மூலம் நவீன ஏர்கூலரை உருவாக்கினேன். வெட்டிவேர் மற்றும் நமக்குப் பிடித்தமான மூலிகைகளை ஏர்கூலரில் அடைத்தால், வெளியேறும் காற்று நறுமணமாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி வெப்பநிலையே இருப்பதால், உடலுக்கு இதமாக இருக்கும்.இந்த காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. குறைந்தபட்சம், 80 வாட்ஸ் மின்சாரம் போதும். 2,500 முதல் 3,500 ரூபாய்க்குள் செய்து விடலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கில்லாத இந்த ஏர்கூலருக்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.இவ்வாறு சத்யப்ரியா கூறினார். 

நன்றி
தினமலர்


Monday, December 13, 2010

சாதித்துக் காட்டினார் செய்னா: ஹாங்காங் தொடரில் சாம்பியன்

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார்.
ஹாங்காங்கில் உள்ள வான்சாய் நகரில், சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பைனலில் உலகின் "நம்பர்-4' வீராங்கனையான செய்னா, சீனாவின் ஷிஜியன் வாங்கை ("நம்பர்-5') எதிர்கொண்டார்.
 முதல் செட்டை ஷிஜியன் வாங் 21-15 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட செய்னா, 2வது செட்டை 21-16 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அபார ஆட்டத்தை தொடர்ந்த செய்னா, 21-17 என கைப்பற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 11 நிமிடம் நடந்த பைனலில், செய்னா 15-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார். விரைவில் "நம்பர்-1' இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


                                                 தற்போது செய்னா, நான்காவது சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் இந்தோனேஷியா (2009, 10), சிங்கப்பூர் (2010) சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது, இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டம். தவிர, இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ், டில்லி காமன்வெல்த் பாட்மின்டன் ஒற்றையர் போட்டிகளில் தங்கம் வென்று சாதித்ததன்மூலம், இந்த ஆண்டு 5 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

                                   சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங்கில், இந்தியாவின் செய்னா நேவல் (59611.2637 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் சீனாவின் இகான் வாங் (65308.9106 புள்ளி), ஜின் வாங் (64772.4017 புள்ளி), டென்மார்க்கின் டினி பயுன் (60400.0982 புள்ளி) ஆகியோர் உள்ளனர். விரைவில் வெளியிடப்பட உள்ள ரேங்கிங்கில், ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செய்னாவுக்கு, 9200 புள்ளி வழங்கப்படும் பட்சத்தில் மொத்தம் 68811.2637 புள்ளிகள் பெறுவார். இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய ஜின் வாங், 6420 புள்ளிகள் கூடுதலாக பெற்று 71192.4017 புள்ளிகள் பெறுவார். இதன்மூலம் செய்னா மீண்டும் "நம்பர்-2' இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. வரும் 14ம் தேதி ஐதராபாத்தில் துவங்கவுள்ள இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரில் சாதிக்கும் பட்சத்தில், செய்னா "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.

                                           ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பின், இத்தொடரில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக கடந்த 1982ல் நடந்த இத்தொடரில், இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.  

Monday, October 4, 2010

மருத்துவ புரட்சி படைத்த ராபர்ட்டுக்கு நோபல் பரிசு

மருத்துவ உலகில் புரட்சி ஏற்படுத்திய பிரிட்டனை சேர்ந்த ராபர்ட் எட்வர்டுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் ( உடற் கூற் இயல் ) இவர் ஆற்றிய பணிக்காக பாராட்டி இந்த பரிசு அளிக்கப்படுகிறது.
                                     
                                         இன்று நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ராபர்ட் எட்வர்டு பிரிட்டனை சேர்ந்தவர். 85 வயது ஆகும் இவர் மருத்துவ துறைக்கு அரும்பணியாற்றி இருக்கிறார் என நோபல் பரிசு அறிவிக்கும் சுவீடன் தெரிவித்துள்ளது. மேலும் இவர் உலகில் வறட்டுத்தன்மைக்கு ( மலடு) இல்லாத நிலைக்கு இவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவியிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.1978 ஆம் ஆண்டு தான் இவர் முதன் முதலில் டெஸ்ட்  டியுப் குழந்த்தையை உருவாக்கினார்.

                                                 டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் உலகில் 10 க்கும் மேற்பட்ட சதவீத்தனர் இதனை நம்பித்தான் இருக்கின்றனர். என்றும் கூறப்பட்டுள்ளது.

                                     
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போது எப்போதும் மருத்துவ துறைக்குத்தான் முதலில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து அமைதி, இலக்கியம் என நோபல் பரிசு வழங்கப்படும். இந்த நோபல் பரிசு கடந்த 1901 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரவீந்தரநாத் தாகூர் , அன்னைதெரசா, சர்.சி.வி.,ராமன், இந்தியாவில் பிறந்து அமெரிக்கராக வாழும் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முக்கியஸ்தர்கள்.