Thursday, December 30, 2010

Monday, December 13, 2010

சாதித்துக் காட்டினார் செய்னா: ஹாங்காங் தொடரில் சாம்பியன்

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார்.
ஹாங்காங்கில் உள்ள வான்சாய் நகரில், சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பைனலில் உலகின் "நம்பர்-4' வீராங்கனையான செய்னா, சீனாவின் ஷிஜியன் வாங்கை ("நம்பர்-5') எதிர்கொண்டார்.
 முதல் செட்டை ஷிஜியன் வாங் 21-15 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட செய்னா, 2வது செட்டை 21-16 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அபார ஆட்டத்தை தொடர்ந்த செய்னா, 21-17 என கைப்பற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 11 நிமிடம் நடந்த பைனலில், செய்னா 15-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார். விரைவில் "நம்பர்-1' இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


                                                 தற்போது செய்னா, நான்காவது சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் இந்தோனேஷியா (2009, 10), சிங்கப்பூர் (2010) சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது, இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டம். தவிர, இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ், டில்லி காமன்வெல்த் பாட்மின்டன் ஒற்றையர் போட்டிகளில் தங்கம் வென்று சாதித்ததன்மூலம், இந்த ஆண்டு 5 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

                                   சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங்கில், இந்தியாவின் செய்னா நேவல் (59611.2637 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் சீனாவின் இகான் வாங் (65308.9106 புள்ளி), ஜின் வாங் (64772.4017 புள்ளி), டென்மார்க்கின் டினி பயுன் (60400.0982 புள்ளி) ஆகியோர் உள்ளனர். விரைவில் வெளியிடப்பட உள்ள ரேங்கிங்கில், ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செய்னாவுக்கு, 9200 புள்ளி வழங்கப்படும் பட்சத்தில் மொத்தம் 68811.2637 புள்ளிகள் பெறுவார். இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய ஜின் வாங், 6420 புள்ளிகள் கூடுதலாக பெற்று 71192.4017 புள்ளிகள் பெறுவார். இதன்மூலம் செய்னா மீண்டும் "நம்பர்-2' இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. வரும் 14ம் தேதி ஐதராபாத்தில் துவங்கவுள்ள இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரில் சாதிக்கும் பட்சத்தில், செய்னா "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.

                                           ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பின், இத்தொடரில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக கடந்த 1982ல் நடந்த இத்தொடரில், இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.  

Wednesday, December 8, 2010

இந்தியனின் இன்றைய நிலை

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மகனின் தலையிலும் நமது தாயகம் உலக வங்கியிடம் வாங்கிய கடனின் ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளது.
                        இவ்வாறு நாம் கையேந்தும் நிலையிலும் நமது தாய் திரு நாட்டில் நடந்துள்ள மிக பெரிய ஊழல் (உலக வரலாற்றில் இப்படி ஒரு சாதனை). ஒரு லட்சத்து எழுவதைந்து  ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு என்பது ஒரு உலக சாதனை.

                                   நாட்டில் மக்கள் நடந்து செல்ல ஒரு உருப்படியான சாலை வசதி இல்லை, மூன்று வேலை உணவுக்கு நாம் கை ஏந்தும் அவல நிலை, எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு நாடாக நமது நாடு இருக்கிறது.

                                  ஆனால் இவர்கள் அடுத்த மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் ஆசையை மட்டும் கொஞ்சம் கூட குறைத்து கொள்ள மாட்டார்கள். இந்த மக்களும் அதை பற்றி எல்லாம் கவலை படாமல் அடுத்த தேர்தலில் யார் எவ்வளவு பணம் கொடுக்கின்றனர் என்றே பார்கின்றனர்.

                         நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது கூட வெறும் ஆயிரம் கோடி  ரூபாய் அளவுக்குத்தான் சுரண்டிருப்பார்கள் ஆனால் இன்றைய அரசியல் வாதிகள் அதை எல்லாம் மிஞ்சி விட்டார்கள் என்பதே இந்தியர்க்கு கிடைத்த பெருமை.
                                         இங்குதான் மனிதன் பிறக்கும் மருத்துவமனை முதல் கடைசி  இடமான சுடுகாடு வரை ஊழல் நடந்து உள்ளது. இந்த அவல நிலை இந்த பிரபஜந்தில் வேறுஎங்கும் காண முடியாத ஒரு இமாலய சாதனை ஆகும்.
                                         அவ்வாறு இவர்கள் சேர்க்கும் பணத்தையும் வெளி நாடுகளில் சென்று வங்கியில் போட்டு அந்த நாட்டின் பொருளாதார வளர்சிக்கு மறைமுகமாக பெரிதும் உதவுகிறார்கள் என்பது இந்த அரசியல் வாதிகளுக்கு தெரியுமோ தெரியாதோ.
                                           இந்த விதத்தில் நாம் அனைவரும் ஏமாளி இந்தியன் என்ற முறையில் பெருமை பட்டு கொள்ள வேண்டிய நேரம் ஆகும்.