Wednesday, October 13, 2010

கண்பார்வையற்றவரின் சாதனை முயற்சி: கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்

திருநெல்வேலி : கண்பார்வையற்றவர் கணிதம் மற்றும் புள்ளியியலில் டாக்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் "கணிதவியல் மற்றும் புள்ளியல்' பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு பிஎச்.டி.,டாக்டர் பெற்றவர் முழுவதும் கண்பார்வையற்ற சிவசக்திவேல். அனைவரது புருவங்களையும் உயர்த்தி அவர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். வழக்கமாக பார்வையற்றவர்கள் வரலாறு, தமிழ் போன்ற கலைப்பாடங்களைத்தான் தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.

ஆனால் கணிதம் மற்றும் புள்ளியியலில் பி.எச்டி., டாக்டர் பட்டம் பெற்ற சிவசக்திவேல் இதுகுறித்து கூறுகையில், எனக்கு சொந்த ஊர் அருகில் உள்ள ஏழுசாட்டுப்பத்தாகும். நான் கன்னியாகுமரி, அந்தோணியார் பள்ளியில் பயிலும் வரையிலும் கண்பார்வை நன்றாக இருந்தது. இருப்பினும் வகுப்பு நடக்கும்போது ஆசிரியர் எழுதிபோட்டதை கரும்பலகைக்கு அருகில் வந்து பார்த்து எழுதிவிட்டு செல்லும் நிலையில் இருந்தேன். நான் பணிபுரியும் விவேகானந்தா கல்லூரியில்தான் பி.ஏஸ்.சி.,பயின்றேன். திருச்செந்தூர் கல்லூரியில் எம்.எஸ்.சி.,யும், மதுரையில் எம்.பில் பயின்றேன். விவேகானந்தா கல்லூரியில் துணைப்பேராசிரியராக 1983ல் பணிக்கு சேர்ந்தேன். அப்போது பார்வை இருந்தது. பணியில் சேர்ந்த பிறகு முழுமையாக பிறகு அரைகுறையாக இருந்த பார்வை முழுவதுமாக பறிபோனது. இதனால் நான் நிறைய சிரமங்களை சந்தித்தேன்.

                                            
பார்வையற்றவர் வகுப்பு நடத்த முடியாது என மாணவர்கள் எழுதியதுபோலசிலர் புகார் மனுக்கள் போட்டனர். எனக்கு கண் பார்வை பறிபோனது போல வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது.இருப்பினும் என் மீது மாணவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். 1995ல் கண்பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வந்தது. அதன்படி எனக்கு பாதுகாப்பு கிடைத்தது. இத்தகைய காலகட்டங்கள் போராட்டம் மிகுந்தவை. பி.எச்.டி.,க்கு 2005ல் பதிவு செய்தேன். இடையில் பார்வை போனதால் வழக்கமான பார்வையற்றோர்கள் பின்பற்றும் பிரெய்லி முறையை நான் கற்றுக்கொள்ளவில்லை. எனவேயாராவது நண்பர்கள் பாடத்தை சொல்லச்சொல்ல நன்றாக கேட்டுக்கொண்டு எழுதி பழகினேன்.

வகுப்பில் மாணவர்கள் சேட்டை செய்வார்கள் என்பதெல்லாம் இல்லை. நான் பாடம் நடத்தும்போது மாணவர்கள் நன்றாக கேட்டுக்கொள்கிறார்கள். எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். எனது மனைவி தங்கம், அரசு பள்ளியில் கணித ஆசிரியர் என்பதால் எனது படிப்பிற்கும் கல்லூரி பணிக்கும் உதவினார்,. மூத்த மகன் சிவசங்கர், பி.இ.,முடித்துவிட்டு பணியில் உள்ளார். இளையமகன் சிவரஞ்சன் காரியாப்பட்டி சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆணுஞூடு பயில்கிறார். இப்போதும் எனக்கு உயர்கல்வி பயில உதவி புரிவது என்னிடம் முன்பு பயின்ற பழைய மாணாக்கர்கள்தான். அவர்களில் சிலர்தான்எனக்கு பயிலவும், வகுப்பு நடத்துவதற்காக குறிப்புகள் தரவும், விடைத்தாள் திருத்தவும் உதவுகிறார்கள் என்றார்.
                               இவரை போன்ற தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த உலகம் என்றும் கடமை பட்டுள்ளது.

No comments:

Post a Comment