Tuesday, October 26, 2010

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்

பல்வேறு நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்களின் குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையாக தரப்படுகிறது.குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் சிகிச்சை பெறலாம். இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் கருப்பை ஆகிய உறுப்புகளில் ஏற்படும், பட்டியலிடப்பட 51 வகை நோய்களுக்கு மட்டும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


                 பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என, புதிது புதிதாக நோய்கள் ஏற்படும் இன்றைய சூழலில், குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதால், இத்திட்டத்தின் கீழ் வராத நோய்களால் பாதிக்கப்படுவோரின் நிலை பரிதாபமாக உள்ளது.கூடுதல் கவனிப்பு, நவீன சிகிச்சை போன்ற காரணங்களால், இத்திட்ட பயனாளிகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற விரும்புகின்றனர். அவர்களில் பெரும்பாலோருக்கு, அரசு நிர்ணயித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை.
            
                                      சாமானியர்களுக்கும் தரமான மருத்துவம் வழங்குவது அரசின் கடமை. இதற்கு தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் வழி வகுத்துள்ளது. இத்திட்டம் முழு வெற்றி பெற, காப்பீட்டு தொகைக்கான உச்சவரம்பை நீக்கவும், அனைத்து வகை நோய்களுக்கும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பு. இல்லையெனில் இத்திட்டத்தால், ஏழைகளைவிட, தனியார் மருத்துவமனைகளும், காப்பீட்டு நிறுவனமும் தான் அதிகம் பயன் பெறும்.

                                 சிகிச்சைக்கான தொகையை பயனாளிகளுக்கு வழங்குவதில், ஸ்டார் காப்பீட்டு நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது. இதனால், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு, சில தனியார் மருத்துவமனைகளில் கிகிச்சைக்கான முழு தொகையும், சில மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவு தொகையும் பயனாளிக்கு தரப்படுகிறது. இக்குறையை களைய, காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
                                  

2 comments:

  1. அப்படியே ஏற்கிறேன். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. wat is the procedure for applying மருத்துவ காப்பீட்டு

    ReplyDelete