Thursday, September 9, 2010

ஒரே கிராமத்தில் 1,200 கண் தானம் செய்து சாதனை

ஐதராபாத் : ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1,200 பேர், ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண் தானம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஐதராபாத்தில் இருந்து 42 கி.மீ., தூரத்தில் ரங்கா ரெட்டி மாவட்டம், செவெல்ல டவுன் அடுத்த தேவுனி எர்ரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கண் தானம் வழங்கியது குறித்து, கிராமத்தில் உள்ள பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரசாரம் மேற்கொண்டனர்.விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் ஏராளமானவர்கள் கண் பார்வை இழந்து விடுகின்றனர். அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளி தரும் வகையில், தங்களது மரணத்திற்குப் பின் கண்களை தானமாக வழங்குவது ஒரு முன் உதாரணமான சம்பிரதாயமாகும் என முடிவு செய்த இந்த கிராம மக்கள், சுய சிந்தனையுடன் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்த பின், கண்களை தானமாக வழங்க முடிவெடுத்தனர்.

இதன் முதற்கட்டமாக 200 பேர், ஐதராபாத் சரோஜினி தேவி கண் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வந்து, தங்கள் மரணத்திற்குப் பின் கண்களை தானமாக வழங்குவதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர்.மேலும் இதே கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர், தங்கள் கண்களை தானமாக வழங்குவதாக தெரிவித்து அதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்ட பத்திரங்களையும் மருத்துவமனையின் மேற்பார்வையாளரிடம் வழங்கினர்.கண் தானம் வழங்குவதன் மூலம் பயனாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து கிராமத்தினரிடையே கடந்த இரண்டு மாதங்களாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த ஊராட்சித் தலைவர் சத்தியநாராயண ரெட்டி, மேலும் 1,100 பேர் கண் தானம் வழங்க முன் வந்துள்ளதாக அறிவித்தார். இவர், ஆந்திர மாநில ஊராட்சித் தலைவர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.இதையடுத்து, மாநிலத்திலேயே சிறந்த கிராமமாக எர்ரவள்ளி கிராமத்தைத் தேர்ந்தெடுக்க, இத்தொகுதியின் எம்.எல்.ஏ., ரத்தினம், அரசிடம் சிபாரிசு செய்து வருகிறார்.


நன்றி
தினமலர்

3 comments:

  1. ஆந்திர மாநிலத்தில் எர்ரவள்ளி கிராமத்தை சிறந்த கிராமமாக தேர்ந்த்தெடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பது என்னுடைய கருத்து. மேலும் இந்த மாதிரியான எண்ணம் நம் அணைவரின் மனதிலும் தோன்றவேண்டும். நாம் இறந்த பிறகு நம்முடைய கண்கள் இந்த உலகத்தை பார்க்கும் என்ற எண்ணம் வரும் போது நாம் மிகுந்த சந்தோசம் அடைய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
  2. கண்டிப்பாக இந்த செயலுக்கு அந்த கிராமத்தை பாராட்டியாக வேண்டும். ஏனெனில் இன்று ஒருவர் கண் தானம் செய்வது என்பது மிக அரிது அப்படி இருக்கும் போது ஒரு கிராமமே முன் வந்து கண் தானம் செய்வது என்பது ஆச்சிரியபட வேண்டிய செயலாகும். இந்த கிராமத்தை ஆந்திராவின் சிறந்த கிராமமாக தேர்ந்தெடிப்பதில் தவறு இல்லை என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
  3. ஸ்ரீதரன் மற்றும் ஆனந்த் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. தொடர்ந்து என்னுடைய தொகுப்புகளை காணுமாறு கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete