Tuesday, September 7, 2010

தெற்கு ஆசியாவில் இந்தியாவுன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்

பீஜீங்:  ஆசியாவில் முக்கிய  நபர் என்று கூறியுள்ள சீனா, தெற்கு ஆசியாவின் அமைதிக்கு இந்தியாவுன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது.  டில்லியில்  பிரதமர் மன்மோகன் சிங், சீனா குறித்து   பேட்டியளித்தார்.  இதனை தொடர்ந்து பீஜிங்கில்  பேட்டியளித்த சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ஆசியாவில் சீனா முக்கியமான நாடு. ஆசியாவில் அமைதித்தன்மைக்கும், ஆசியாவின் நிலைத்தன்மைக்கும் சீனா முக்கியபங்காற்றும் என்றார். மேலும் அவர் சீனா மற்றும் இந்தியா வளர்ந்து வரும் நாடுகள், பொது வான விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். தெற்கு ஆசியாவின் அமைதி, நிலையான தன்மை வளர்ச்ட உள்ளிட்டவற்றிற்காக  இந்தியா உட்பட தெற்கு ஆசிய நாடுகளுடன் இணைந்து செயல்பட தயார் என்று கூறினார்.


         நன்றி
     தினமலர்


சீனாவின் பேச்சை முழுதுமாக நம்பினால் நம்மை விட இளிச்சவாயன் வேறு யாரும் இல்லை என்பது என் கருத்து.   வடக்கில் அஸ்ஸாம் மாநிலத்தில் தன்னுடைய ஆளுகையை விரிவுபடுத்தி கொண்டு இந்தியாவிற்கு பெரிய தலை வழியாக இருந்துகொண்டு நம்முடன் இணைந்து தெற்கு ஆசிய அமைதிக்கு  பாடுபடுவோம் என்ற பேச்சு வேடிக்கையாக உள்ளது.



மீ. குமார்

1 comment:

  1. உங்கள் கருத்து மிகவும் உண்மை. கண்டிப்பாக சினாவிடம் நாம் பார்த்துதான் பழகவேண்டும்.

    ReplyDelete