Thursday, September 2, 2010

தமிழ் மொழியின் அவலம்

இன்று தமிழ் மொழி என்பது நேரிடையான தமிழாக அல்லாமல் தமிங்க்லிஷ் ஆக உள்ளது. இதற்கு காரணம் நாம் உபயோகிக்கும் கைபேசி தான், அதில் உரையாட நாம் அதிகபட்சமாக உபயோகிப்பது ஆங்கிலம் மற்றும் தமிங்க்லிஷ் தான். நாம் தமிழை உயிர் கொடுத்து வளர்க்க வேண்டாம், அதன் உயிரோட்டத்தை அழிக்காமல் பார்த்து கொண்டாலே போதும், தமிழ் மொழி நல்ல வளர்ச்சி அடையும் என்பது என்னுடைய கருத்து.

                                                   அதேபோல் தமிழ் மொழியை மெல்ல சாகடிக்க கங்கணம் கொண்டு இருப்பவர்கள் இன்றைய தொலைக்காட்சி துறையும், சினிமாத்துறையும் தான். தமிழ் படங்களுக்கு எழுத்து போட ஆரம்பிக்கும் போதே ஆங்கிலத்தில் ஆரம்பித்து முடிவில் வணக்கம் போடும் வரை ஆங்கிலத்தையே உபயோகபடுதுகின்றனர். மற்ற மொழி படங்கள் அனைத்தும் அவரவர் தாய் மொழியில் இருக்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி,  மேலும் தொலைக்காட்சி பற்றி சொல்ல வேண்டியதில்லை அது நம் வாழ்வில் மிக அவசியாமானதாக உள்ளது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அப்படி இருக்கும் போது அதுவும் தன்னுடைய பங்கிற்கு தமிழ் மொழியை சாகடிப்பது என்பது கொடுமை.

                                        மேலும் தமிழ் மொழியில்சிறந்த  மென்பொருள்கள் தயாரித்து அதன் மூலம் தமிழ் மொழியை  வளர்ச்சி அடைய வைத்தால் அவர்களுக்கு  "கணியன் பூங்குன்றனார் விருதும்  ரூ  1  லட்சம் பரிசு" என்று தமிழக அரசு அறிவிப்பு மூலம் காசு கொடுத்தாவது தமிழ் மொழி வாழவைக்க படவேண்டும் என்ற அவல நிலை.
                           
                                            இவைகளை பார்க்கும் பொழுது தமிழ் இனி மெல்ல சாகும் என்ற நிலை வரலாம் என்று தோன்றுகிறது.
                                    
                                                             நன்றி!




மீ. குமார்                                                                                                                          

No comments:

Post a Comment