Sunday, September 12, 2010

மதுரையில் விமான நிலைய புதிய முனையம் திறப்பு

ஒரே நேரத்தில் ஏழு விமானங்களை நிறுத்தவும், 500 பயணிகளை கையாளவும் ஏற்ற நவீன வசதிகளுடன், மதுரை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம் இன்று திறக்கப்பட்டது. ஒருங்கிணைந்த முனையம் 17 ஆயிரத்து 500 சதுர மீட்டரில், 128 கோடி ரூபாய் செலவில், உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஏரோ பிரிட்ஜ் இணைப்புகள் ("ஏரோ பிரிட்ஜ் பிங்கர்ஸ்') கட்டப்பட்டு உள்ளன. இதன்மூலம் விமான நிலைய கட்டடத்தில் இருந்து, நேரடியாக விமானத்திற்கு செல்ல முடியும். ஏற்கனவே, மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்த முடியும். தற்போது ஏழு விமானங்களை நிறுத்தலாம்.

                            மதுரையில் விமான நிலையத்தில் புதிய முனையம் இன்று திறப்பு விழா காணப்பட்டது. மதுரை மக்களின் நீண்ட நாள் கனவில் பாதி நிறைவேறியது போல் தோன்றுகிறது. மேலும் தினமலர் செய்திதாளில் அன்றைய  மதுரை விமான நிலையம் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

                           1960 களில் மதுரைக்கு இரவில் வரும் விமானங்கள் அனைத்தும் மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் தரை இறங்கியது என்ற செய்தி மெய்சிலிர்க்க  வைத்தது என்பது உண்மை. ஏனெனில் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியான காலத்தில் கூட விமானங்கள் தரை இறங்கும் போது விபத்துகள் உண்டாகிறது. ஆனால் அன்று மதுரைக்கு இரவில் வரும் விமானங்கள் மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் அதாவது இந்த கணினியின் பயன்பாடு அதிகம் இல்லாத காலத்திலும் எந்த ஒரு விபத்து இல்லாமல் தரை இறங்கிய பெருமை இந்த மதுரை விமான நிலையத்திற்கு உண்டு என்பதில் மதுரைக்காரன்  என்ற முறையில் நான் மிகவும் பெருமை படுகிறேன்.
                                
                                  முதலில் ராம்பாபு M.P அவர்கள் மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலைக்கு உயர்த்த வேண்டும் என்றார், அதன் பின் வந்த சுப்ரமணிய சாமீ அவர்கள் அதற்க்கான வேலையில் இறங்க ஆரம்பித்தார் அதன் பின் வந்த மோகன் அவர்கள் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசினார். ஆனால் இன்று அழகிரி அவர்கள் வந்த பின் அதற்கான வேலைகள் வேகமாக நடந்து இன்று புதிய முனையம் திறப்பு விழா கொண்டாடப்பட்டது.


நன்றி
தினமலர் 

மீ. குமார்

No comments:

Post a Comment