Monday, September 6, 2010

கோவை மத்திய சிறையில் வ.உ.சி., பிறந்தநாள் விழா

கோவை: வ.உ.சிதம்பரனாரின் 138வது பிறந்த நாளையொட்டி, கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வ.உ. சிதம்பரனார், சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் கைதியாக வைக்கப்பட்டார். அப்போது அவரை செக்கிழுக்கச் செய்தனர். வ.உ.சி., இழுத்த செக்கை தற்போது சிறைத்துறை பராமரித்து வருகிறது. நாட்டுப்பற்றுடையோர் சிறைத்துறையின் அனுமதி பெற்று வ.உ.சி., இழுத்த செக்கிற்கு மரியாதை செய்வது வழக்கம். நேற்று வ.உ.சி.,யின் 138வது பிறந்த நாளையொட்டி, சிறைத்துறை துணைத் தலைவர் கோவிந்தராஜன், பாரதியார் பல்கலைக் கழக மாணவர் நலத்துறை இயக்குனர் பத்மநாபன் ஆகியோர், செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாரதியார் பல்கலைக்கழக மாணவியரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

நன்றி
தினமலர் 
 
 
 
வ.உ.சி.பிள்ளை அவர்கள் சுதந்திர தியாகி அவர் நாட்டின் பொதுவானவர் ஆனால் அவரை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுகொள்ளாமல் ஒரு ஜாதி பிரிவினர் மற்றும் ஏற்று கொண்டு அவர்க்கு மரியாதை செலுத்துவது என்பது பெரிய கொடுமை. மேலும், அவர் அற வழியில் போராடியவர் ஆனால் இன்று அவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பொது மக்களை இடையூறு விளைவித்து கொண்டாடபடுவது வேதனையான செயலாக உள்ளது. 


இன்று கோவை பல்கலைகழக மாணவிகள் மலர் தூவி அமைதியான வழியில் அவருக்கு அஞ்சலி செலுத்தியது மிகவும் சந்தோசப்பட வேண்டிய செயல் ஆகும். 



மீ. குமார்





 
 
 

No comments:

Post a Comment