Tuesday, September 14, 2010

மாணவன் பலி: பள்ளிக்கு தீவைத்து பொதுமக்கள் ஆவேசம்

கிருஷ்ணகிரி : தனியார் பள்ளி பஸ் மோதி, மாணவன் இறந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் பள்ளிக்கு சொந்தமான மூன்று பஸ், காருக்கு தீ வைத்தனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு உதவி பெறும் அண்ணா அறிவகம் மேல்நிலைப் பள்ளியை, சையத் நடத்தி வருகிறார். சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், அதிக அளவில் இங்கு படிக்கின்றனர். போச்சம்பள்ளி அடுத்த சின்னகரடியூர் கனிகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் டெய்லர் சேட்டு மகன் சுரேஷ் (16), அப்பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று காலை 8 மணிக்கு, சைக்கிளில் பள்ளிக்குச் சென்ற அவரை, நோட்டு வாங்க 2,500 ரூபாய் கட்டாததால், ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சேர்க்கவில்லை. சிறிது நேரம் அங்கே நின்ற சுரேஷ், 8.30 மணிக்கு பள்ளி நுழைவாயிலில் இருந்து, சைக்கிளில் வெளியே வந்த போது, மாணவர்களை ஏற்றி பள்ளிக்கு வந்த பஸ், அவன் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 நன்றி
தினமலர்


                                      இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கேவலம் ஒரு  2500/=  ரூபாய்க்காக எதிர் காலத்தில் டாக்டர் ஆவேன் என்ற கனவோடு படிக்க வந்த ஒரு இளம் தளிரை இப்படி தீயிக்கு இரை ஆக்கிய அந்த பள்ளி நிர்வாகம் அந்த மாணவனின் குடும்பத்திற்கு என்ன செய்ய போகிறது என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது?

 மீ. குமார்

2 comments:

  1. இதுபோன்ற பள்ளிகளாலும் , ஆசிரியர்களாலும் தான் ஆசிரியர்கள் மானம் பறிப்போகிறது. நிர்வாகத்தை எதிர்த்து நேர்மைக்காக , மாணவர்கள் சார்பாக போராடத் தாயாராக இல்லாத ஆசிரியர்கள் , ஆண்மையிழந்தவர்கள். அற்பணிப்பு தேவை. வெட்கி தலைகுனிகிறேன்... பகிர்வுக்கு நன்றி. தொட்ர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. நன்றி திரு. மதுரை சரவணண் அவர்கள்,

    தங்களின் கருத்து உண்மை, இது போன்ற பள்ளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை விட்டு விட்டு இந்த அரசும் அரசாங்க அதிகாரிகளும் மெத்தனமாக இருந்தால் இது போன்ற இழப்புகளை நாம் எதிர் காலத்தில் நிறைய சந்திக்க வேண்டி வரும்.

    தொடர்ந்து உங்களின் பின்னூட்டத்தை எழுதவும்.

    ReplyDelete